*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என...