நல்ல சிந்தனை 9
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள் அவர்களுக்கு புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.சிந்தித்து செயல்படுங்கள் இதுவும் கடந்து போகும்.!
விட்டுக் கொடுப்பதற்கும் விட்டுச் செல்வதற்கும் ஒரே வித்தியாசம் தான்...உறவுகளை இழந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள்...உறவுகளே தேவையில்லை என்று நினைப்பவர்கள் விட்டுச் செல்கிறார்கள்.!!
அதிகமான அன்பை விட சரியான புரிதல் தான் எந்த உறவையும் நீண்டகாலம் வாழ வைக்கும்.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக