சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1
இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற அழகிய கிராமத்தில் வீரன்குடிகாடு என்னும் சிற்றூரில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி பக்கிரிசாமி, நாகம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உடன் பிறந்தவர்கள் ஆவார்கள். இரண்டு சகோதரர்களும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்கள். மூத்த பெண்ணாக குடும்பத்தில் செல்லமாக வளர்ந்து வந்தார். இந்த நிலையில் தந்தை மலேசியா சென்றவர் திரும்ப வரவில்லை. பாதுகாப்புக்காக தாயார் குழந்தைகளோடு தாத்தா வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்தில் ஐக்கியமாகினர். தாயார் தான் மூத்த பெண். சிறுவயதிலேயே திருமணம் ஆனதால் மாமன்கள் சித்திகள் சிறு வயதுகாரர்களாக இருந்தனர். ஆதலால் மாமன்கள் அண்ணன்கள் ஆகினர் சித்திகள் சகோதரிகளாகினர். நாளடைவில் அதுவே உறவாக நிலைத்தது. தாத்தா காயாரோகணம் ஊரில் செல்வந்தராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். பரவை சந்தைக்கு காய்கறிகளை உற்பத்தி செய்...
கருத்துகள்
கருத்துரையிடுக