அனுபவம் தந்த பாடம்

கடந்த சில வருடங்களாக வாழ்க்கை எனக்கு மிகக்கடுமையான பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது...

சொந்தம், பந்தம், நட்பு, உறவு என்று எவ்வளவு வலுவாக நாம் இருந்திருந்தாலும்,.....

ஒருவருக்கொருவர் எவ்வளவு காலமாக அறிந்திருந்தாலும்,....

ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்யோன்யமாக பழகி இருந்தாலும்,...

எத்தனை விஷயங்களை ஒன்றாகச் செய்திருந்தாலும்,....

எவ்வளவு அன்பு, காதல், நம்பிக்கை, பாசம் என்று நாம் நமது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தாலும்....

கண் இமைக்கும் நேரத்தில், மனிதர்களின் இதயங்கள் மாறிவிடுகிறது....

எல்லாம் சுயநலம்...
எல்லோருக்கும் சுயநலம்...
எல்லோரிடமும் நயவஞ்சகம்...

உடைந்து விட்டேன்...

இவ்வளவு மோசமானவர்களுடன் இவ்வளவு காலம் தெரியாமல் பழகி தொலைத்து விட்டோமே என்ற வலியோடு....
தனிமையே இனிமை என்று அனுபவத்தில் உணர்ந்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1