இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுமதி ஆசிரியர்| Sumathy Teacher| பாகம் 2

படம்
    சுமதி ஆசிரியர் பற்றி ஏற்கனவே முதல் பாகத்தில் கூறப்பட்டுள்ளது. அதனை படிக்காமல் தவறவிட்ட நண்பர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொட்டு உள்ளே சென்று படித்து பாருங்கள்.    http://thamizhmaniv.blogspot.com/2026/01/sumathy-teacher-1.html     இனி சுமதி பற்றி கணவர் தமிழ்மணி ஆகிய நான் நேரடியாக உங்களுடன்...     சுமதி ஆசிரியர் பணியில் சேர்ந்தது முதல் நாகப்பட்டினம் மாவட்டம்,  கோட்டூர் கடைத் தெருவில் சரவணா மெடிக்கல் வைத்திருக்கும் சரவணன் என்பவர் பழக்கமானார். அவரின் மனைவி சத்யபாமா ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வாடகைக்கு எங்களை குடியமர்த்தினார்.      முதலில் சுமதியின் பட்டப்படிப்பு பற்றி கூறுகிறேன். சுமதி ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் பட்டப்படிப்பு படிக்க விரும்பினாள். ஆதலால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம் பி.லிட் தமிழ் (இளங்கலை) படிக்க சேர்ந்தாள். மே 2012 ஆம் ஆண்டு பி.லிட்  இளங்கலை பட்டமும் பெற்றார்.      ம...